கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள்?


கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் (Patent) அரசாங்கங்களால் அளிக்கப்படுகின்றன. ஒருவர் தன் கண்டுபிடிப்பின் விற்பனை உரிமை மூலம் சில ஆண்டுகளுக்குப் பணம் ஈட்ட காப்புரிமை வழி செய்கிறது. வேறு யாரும் அதே பொருளை அந்தக் காலகட்டத்தில் காப்புரிமை பெற்றவரின் அனுமதி இல்லாமல் தயாரித்தால் அது தண்டனைக்குரிய செயலாகும். காப்புரிமைக்கான விண்ணப்பங்கள் மூலம், கண்டுபிடிப்பு மற்றும் கண்டுபிடிப்பாளர் பற்றிய தகவல்களை நாம்
அறிந்துகொள்ள முடியும். ஆனால், பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய கண்டுபிடிப்பாளர்கள், காப்புரிமை முறை அறிமுகமாவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள்.
 

இன்னும் பலர் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபோது எழுத்து முறையே கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் பதிவாகவில்லை. உலகை மாற்றிய பல முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்தவர்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாது. முதல் காப்புரிமை, இத்தாலி நாட்டில் உள்ள புளோரிடா நகரில் 1421-ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget