
பல கோப்புகளாக இல்லாமல் ஒரே கோப்பாக 5 GB யில் இருந்தது. அப்போது தான் கோப்புகளை வெட்டி இரண்டு தடவையாக காப்பி செய்து பின்னர் இணைத்துக் கொண்டால் போயிற்று என்ற எண்ணம் வந்தது.
GSplitter என்ற இந்த மென்பொருள் பெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் பயன்படும் இலவச மென்பொருளாகும். இதன் மூலம் எந்த வகை கோப்பாக இருந்தாலும் அதனை வெட்டி பல துண்டுகளாகப் பிரிக்க முடியும். இதில் வெட்டப்படும் பகுதிகள் பீஸ் (Pieces) என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் Zip/rar கோப்புகள், படங்கள், இசை, பேக்கப் கோப்புகள், சிடியின் ஐஎஸ்ஓ வகை கோப்புகள், ஆபிஸ் கோப்புகள் என எல்லாவற்றையும் வெட்ட முடியும்.
வெட்டப்பட்ட துண்டுகளை இந்த மென்பொருளில் Unite என்ற வசதி மூலம் முதல் கோப்பை மட்டும் தேர்வு செய்து எளிதாக இணைக்கலாம். இதில் உள்ள Split Express என்ற வசதி மூலம் பெரிய கோப்புகளை விரைவில் பல துண்டுகளாகப் பிரிக்கலாம்.இதன் புதிய பதிப்பு Gsplit 3 பயன்படுத்த
எளிமையாக உள்ளது.

மேலும் வெட்டப்படும் கோப்புகளின் பெயர்கள் எப்படி வரவேண்டும் எனக் கொடுக்கலாம். வெட்ட வேண்டிய பகுதிகளுக்கு அளவையும் (File Size) அமைக்கலாம். உதாரணமாக 500 Mb கோப்பிற்கு 100 Mb என்று அளவு கொடுத்தால் 5 கோப்புகளாக வெட்டப்படும்.
நன்மைகள் :
1.பெரிய கோப்புகளைப் பிரிப்பதன் மூலம் சிடி/டிவிடிகளில் எளிதாக காப்பி செய்யலாம்.
2.மின்னஞ்சல் அனுப்பும் போது வெட்டிய பகுதிகளை எளிதாக அனுப்பலாம்.
3.பென் டிரைவ் போன்ற கருவிகளில் எளிதாக ஏற்றலாம்.
4.பல இணையதளங்களில் விரைவாக அப்லோடு செய்து நண்பர்களுக்குப்
பகிரலாம்.
5.குறிப்பிட்ட இணையதளங்களில் கோப்புகளை அப்லோடு செய்ய அளவொன்றை
நிர்ணயம் செய்திருப்பார்கள். அந்த மாதிரி நேரங்களில் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக தரவேற்றலாம்.
தரவிறக்க :
Downloads: