வேர்ட் டிப்ஸ்

பாரா தொடக்க இடைவெளி
வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்து பவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம். இதில் இன்டென்ட்


மற்றும் ஹேங்கிங் இன்டென்ட் என்று வகைகள் உண்டு. இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு அமைப்பது. ஹேங்கிங் இன்டென்ட் என்பது முதல் வரி தவிர்த்து மற்ற வரிகளை இன்டென்ட் செய்து ஸ்பேஸ் விட்டு அமைப்பது. இதற்கு கீ போர்டில் இருந்து கைகளை எடுத்து பின் மவுஸ் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் கர்சரை வைத்து பின் மீண்டும் கீ போர்டு பயன்படுத்தி இன்டென்ட் அமைக்கிறோம். மவுஸ் இல்லாமல் கீ போர்டு மூலம் இன்டென்ட் அமைக்க கீழ்க் குறிப்பிட்டுள்ள கீகளைப் பயன்படுத்தவும்.Ctrl + M: கொடுத்தால் மொத்த பாராவும் அரை அங்குலம் நகர்ந்து கொடுக்கும். மேலும் அதிகம் நகர்ந்து செல்ல அடுத்தடுத்து கொடுக்கவும். Ctrl + Shift + M: கொடுத்தால் அரை அங்குலம் இன்டென்ட் இருப்பதைக் குறைக்கும். அதாவது ஏற்கனவே கொடுத்த இடைவெளியை முழு பாராவிற்கும் குறைக்கும்.Ctrl + T:இந்த கீகள் ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்கு வலது புறமாக நகர்த்தும். Ctrl + Shift + T: ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்குக் குறைக்கும். 
கீ போர்டு மூலமாகவே இன்டென்ட் அமைப்பது எளிதாக உள்ளதா!
புல்லட் பாய்ண்ட்ஸ்
வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந் தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ ஷிப்ட்+எல் அழுத்தினால் போதும். தானாக புல்லட் அமைந்து விடும். கண்ட்ரோல்+ஷிப்ட்+என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கிவிடும். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget