பவர்பாய்ண்ட் டிப்ஸ்
- புல்லட் இல்லாத லிஸ்ட்
- கருப்பு திரையை நீக்க
- குறுக்கீடுகள் இல்லாத ஸ்லைட் ÷ஷா
- எழுத்துப் பிழைகளை மறைக்க
- தொடர்ந்து இசை கிடைக்க
சவுண்ட் பைலை ஒரு ஆப்ஜெக்டாக அமைத்திருக்கையில், ஒரு ஸ்பீக்கர் ஐகான் ஒன்று ஸ்லைடில் தெரியும். இதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Edit Sound Object” என்ற பிரிவு தெரியும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள “Loop until stopped” என்ற பிரிவில் செக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து மூடவும். இனி அடுத்த ஸ்லைட் செல்லும் வரை, பிரசன்டேஷன் முடியும் வரை அல்லது நீங்களாக நிறுத்தும்வரை இசை தொடர்ந்து ரம்மியமாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.
- பவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்
Normal: இந்த வியூவைத் தேர்ந்தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட்லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும்.
Slide Sorter: அனைத்து ஸ்லைட்களின் சிறிய தோற்றத்தினை இந்த வியூவில் பார்க்கலாம். அதிக ஸ்லைட்கள் உள்ள பிரசன்டேஷன் ÷ஷாவில் இது மிக உதவியாய் இருக்கும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட ஸ்லைடைத் தேடிப்பெறுவதில் இந்த வியூ நம் பணியை எளிதாக்கும்.
Notes Page: அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்லைடின் தோற்றத் தினை சிறிதாகவும் அதற்கான நோட்ஸ் பேஜினைப் பெரிதாகவும் காட்டும். இது ஏறத்தாழ நார்மல் வியூ போலத்தான் செயல்படும். ஆனால் ÷ஷா அவுட்லைன் கிடைக்காது.
Slide Show:: வியூ மெனுவில் இந்த மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அதன் மூலம் ஸ்லைட் ÷ஷாவினை இயக்கலாம்.
Black and White: அப்போதைய ஸ்லைடின் கருப்பு வெள்ளைத் தோற்றத்தை பெரிய அளவிலும் வண்ணத் தோற்றத்தை சிறிய விண்டோவிலும் இந்த வியூவில் பார்க்கலாம். பிரசன்டேஷனின் அனைத்து வண்ணங்களையும் நாம் பார்க்க வேண்டாம் என்று எண்ணுகையில் இந்த வியூ உதவும்.
- பவர் பாய்ண்ட் பிரசன்டேஷனில் ஹெடரும் புட்டரும்
பிரசன்டேஷனைத் திறந்து கொண்டு View மெனு செல்லவும். அங்கு “Header and Footer” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். “Header and Footer” என்ற தலைப்பில் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Slide” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் என்ற ஆப்ஷன்களில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது “Update automatically Date and time” என்ற ஆப்ஷனையும் மேற்கொள்ளலாம். இது “Include on slide” என்ற பிரிவில் கிடைக்க வரும். ஸ்லைடில் நம்பர் சேர்த்திட “Slide number” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். புட்டரில் சேர்த்திட "Footer''' என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பாக்ஸில் என்ன டெக்ஸ்ட் இணைத்திட வேண்டுமோ அதனை டைப் செய்திடவும். அடுத்து ஸ்லைட் டேப் செட்டிங்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட Apply என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். “Notes and Handouts” என்ற டேப்பின் கீழ் “Header” என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் “Date and time” என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு நீங்கள் அமைக்க விரும்பும் அனைத்தையும் தேர்ந்தெடுத்த பின்னர் “Apply to All” என்பதில் கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தபடி ஹெடர் புட்டர் இடங்களில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் மற்றும் எண்கள், தேதிகள் தெரியவரும். எதனையாவது மாற்ற வேண்டும் என எண்ணினால் மேலே சொன்ன வகையில் மீண்டும் செயல்பட்டு முடிக்கவும்.