குயிக் லாங்ச் டூல் பாரில் ஒட்ட

டி.டி.பி. துறையில் பணி புரியும்  ஒருவர், அடிக்கடி விண்டோஸ் கேரக்டர் மேப்பினைப் பயன்படுத்து வார். தான் தயாரிக்கும் டெக்ஸ்ட் பைல்களில், ஸ்பெஷல் கேரக்டர்க்ளை அடிக்கடி அமைக்க வேண்டிய திருப்பதால், அவற்றை கேரக்டர் மேப்பிலிருந்து, ஸ்பெஷல் கேரக்டர்களை காப்பி செய்து, கிளிப் போர்டுக்குக் கொண்டு சென்று பயன்படுத்துவார். அவர் கேரக்டர் மேப்பினை எப்படி குயிக் லாஞ்ச் பாரில் பின் செய்வது என்று கேட்டு கடிதம் எழுதி உள்ளார். சற்று விரிவாக இதனை இங்கு தருகிறேன். இவர் பயன்படுத்து வது விண்டோஸ் எக்ஸ்பி, சர்வீஸ் பேக் 3 பதியப்பட்டது.
1. முதலில் Start, All Programs, Accessories, System Tools கிளிக் செய்து செல்லவும்.
2. இந்த மெனுவில் Character Mapஐப் பார்க்கலாம். இங்கு ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் அந்த ஐகான் மீது அழுத்தியபடியே, இழுத்து வந்து குயிக் லாஞ்ச் டூல் பாரில் விடவும்.
3. இன்னும் கிடைக்கும் மெனுவில் Copy here என்பதைத் தேர்ந்தெடுக் கவும்.
இதில் நீங்கள் இடது கிளிக் செய்து அப்படியே நகர்த்தி வந்து விட்டிருக்கலாம். ஆனால் அது சிஸ்டம் டூல்ஸ் மெனுவிலிருந்து அதனை நீக்கிவிடும். வலது புறம் கிளிக் செய்து செயல் பட்டதால், இரண்டு இடங்களிலும் உங்களுக்கு கேரக்டர் மேப்பிற்கான ஷார்ட் கட் கிடைக்கிறது. இதே வழியை

விண்டோஸ் டூல் எதற்கும் பயன்படுத்தலாம். விண் டோஸ் 7 தொகுப்பில் இந்த வேலையை இன்னும் மிக எளிதாக மேற்கொள்ள லாம். ஸ்டார்ட் மீது கிளிக் செய்திடவும். பின்னர், character என டைப் செய்திடவும். மெனுவில் கேரக்டர் மேப் கிடைக்கும். மேலே கூறியபடி அதனை இழுத்து வந்து குயிக் லாஞ்ச் பாரில் விட்டுவிடலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget