பாஸ்போர்ட் அளவு புகை படங்களை எளிதாக உருவாக்க இணையதளம்

ன்றாட வாழ்க்கையில் பல நேரங்களில் பாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்கள் தேவைப் படுகின்றன. வேலைக்கு விண்ணப்பம்
செய்தல் , கல்லூரி அடையாள அட்டை போன்ற பல நிலைகளில் பாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்கள் அவசியமான ஒன்றாகும்.
நம்மிடம் டிஜிட்டல் கேமராவில் எடுத்த ஒளிப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் நல்ல ஒளிப்படங்கள் இருக்கும் அதை எப்படி பாஸ்போர்ட் அளவுக்கு மாற்றுவது எனத் தெரியாது .

போட்டோஷாப் தெரிந்தவர்கள் இருக்கிற ஒளிப்படத்தை வைத்தே பாஸ்போர்ட் உருவாக்குவார்கள் . அது தெரியாதவர்கள் ஸ்டுடியோவிற்க்கோ அல்லது வேறு ஒருவரிடமோ அந்த போட்டோவை கொடுத்து அதை பாஸ்போர்ட் அளவுக்கு மாற்ற வேண்டும். 

ஆனால் எந்த வித மென்பொருளும் இல்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் நாமே பாஸ்போர்ட் அளவு போட்டோவை உருவாக்க இயலும் அதற்க்கு ஒரு இணையதளம் நமக்கு உதவுகிறது 
இதோ அதற்க்கான சுட்டி : e-passportphoto

இந்த இணையத்தின் சிறப்பான விசயம் என்னவென்றால் இதில் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் ஏற்ற அளவில் பாஸ்போர்ட் ஒளிப்படங்களை உருவாக்க முடியும்.

பாஸ்போர்ட் ஒளிப்படங்கள் உருவாக்க :

1.மேலே குறிப்பிட்டு உள்ள இணையதளத்திற்கு சென்று Country என்ற பிரிவில் உங்கள் நாட்டை தேர்வு செய்யவும்.


2.Photo என்ற பிரிவில் வழக்கமான பாஸ்போர்ட் ஒளிப்படம் , விசா , PAN கார்டு என்ற மூன்று பிரிவுகளில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள்.பின்னர் GET MY PASSPORT PHOTO என்ற பொத்தானை அழுத்தவும்.

3.அடுத்த பக்கத்தில் பிரவுஸ் (BROWSE) என்ற பொத்தானை அழுத்தி உங்களிடம் உள்ள போட்டோவை தேர்வு செய்யுது NEXT பொத்தானை அழுத்தவும்.

4.உங்கள் படம் அப்லோடு ஆனவுடன் உங்கள் ஒளிப்படத்தில் கிளிக் செய்து ட்ராக் செய்யுங்கள் ( CLICK AND DRAG ) உங்கள் முகம் நன்றாக தெரிகிற மாதிரி அந்த எடுத்துக்காட்டில் உள்ளது போல தேர்வு செய்து விட்டு NEXT கொடுக்கவும் .


5.இதில் PROFESSIONAL மற்றும் STANDARD ஆகிய சேவைகள் உள்ளன. நாம் கட்டணம் இல்லாமல் ஒளிப்படத்தை பெற NO THANKS என்பதைக் கிளிக் செய்தால் உருவாக்கப்பட்ட பாஸ்போர்ட் ஒளிப்படத்தை இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம்

! ! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! ! !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்