பிடிஎப் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்ற இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்
கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களில் பலவும் சரியாக வேலை செய்வது இல்லை.
முறையாக பிடிஎப் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றம் செய்வது கிடையாது. ஒரு சில குறைபாடுகள் இருக்கதான் செய்கின்றன. எந்த வித குறைபாடும் இல்லாமல் மாற்றம் செய்ய Able2Doc என்ற மென்பொருள் உதவி செய்கிறது.
தற்போது Able2Doc என்ற மென்பொருளை லைசன்ஸ் கீயுடன் இலவசமாக தருகின்றனர். இந்த மென்பொருளை தரவிறக்க முகநூலில் கணக்கு இருக்க வேண்டும்.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூலின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுக்கென ஒரு இரகசிய கோடினை பெறுவீர்கள் அதனை குறித்து வைத்துக் கொள்ளவும்.
பின் Able2Doc PDF to Word Giveaway என்னும் சுட்டியை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் இரகசிய எண்னை உள்ளிட்டு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பின் மென்பொருளை கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் Able2Doc அப்ளிகேஷனை ஒப்பன் செயது. குறிப்பிட்ட பிடிஎப் கோப்பை ஒப்பன் செய்யவும். இந்த அப்ளிகேஷன் மூலம் ஆங்கில எழுத்துருக்களை உடைய பிடிஎப் கோப்புக்கள் மட்டுமே வேர்ட் கோப்புக்களாக மாற்ற முடியும்.
பிடிஎப் டாக்குமெண்டை ஒப்பன் செய்து Select என்னும் தேர்வினை அழுத்தி All மற்றும் Area என்னும் செலக்ட் தேர்வுகளை அழுத்தி பிடிஎப் கோப்பை தேர்வு செய்யவும். நீங்கள் எவ்வற்றையெல்லாம் தேர்வு செய்கிறீர்களோ அவைகள் மட்டுமே மாற்றம் ஆகும்.
பின் Convert என்னும் தேர்வினை அழுத்தி வேர்ட் மற்றும் ஒப்பன் ஆப்பிஸ் கோப்பு போர்மட்களில் மாற்றம் செய்து டாக்குமெண்ட்களை சேமித்துக் கொள்ள முடியும். பின் Convert to word என்னும் தேர்வில் Standard(Recommended) என்பதை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Continue என்னும் பொத்தானை அழுத்தவும். மாற்றம் செய்த கோப்பை சேமிக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு கோப்பின் பெயரையும் குறிப்பிடவும்.
தற்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட கோப்பு போர்மட்டில் டாக்குமெண்ட் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும்.