இந்த மென்பொருள் மூலம் எளிமையாக பிடிஎப் கோப்புக்களை ஒண்றினைக்கவும் முடியும். மற்ற மென்பொருள்களை ஒப்பிடுகையில் சிறப்பான மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் வேண்டிய பிடிஎப் கோப்பை தேர்வு செய்யது இணைத்துக் கொள்ளவும்.
பிடிஎப் கோப்பை இணைக்க வேண்டுமெனில் சாதரணமாக பிடிஎப் கோப்புக்களை உள்ளினைத்துவிட்டு பின் Start Processing என்னும் பொத்தானை அழுத்தி இணைத்துக் கொள்ள முடியும். வேண்டுமெனில் எழுத்துருவின் அளவினை மாற்றியமைத்துக் கொள்ளவும் இந்த மென்பொருள் அனுமதி செய்கிறது. Format என்னும் பொத்தானை அழுத்தி எழுத்துருவையும் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
மேலும் பிடிஎப் கோப்பினை சுருக்கவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. Layout options என்பதை தேர்வு செய்து அதில் விருப்ப பொத்தானை அழுத்தி பிடிஎப் கோப்பை தனித்தனியாகவும் பிரித்துக் கொள்ள முடியும்.ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள அனைத்து பக்கங்களையும் தனித்தனியாவும் அல்லது ஒரே பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பக்கங்களையும் சேர்க்க முடியும். இதனால் அதிக பக்கங்களுடைய பிடிஎப் கோப்பை குறைந்த பக்கங்களாக குறைக்க முடியும்.