உங்கள் வலை தளத்தில் உள்ள படங்களை பக்கத்தின் உள்ளேயே பெரிதாக்கி பார்வையிடலாம்

உங்கள் வலை தளத்தின் ஒரு பதிவில் உள்ள புகைப்படத்தை பெரிதாக்கி பார்க்க வேண்டும் எனில் அந்த படத்தை சொடக்க வேண்டும். பின்பு அந்த படம் புதிய பக்கத்தில் திறக்கும். பிறகு மீண்டும் பதிவை பார்வையிட இணைய உலாவியில் back என்பதை அழுத்தி பதிவுக்கு திரும்ப வேண்டியிருக்கும். இது சற்று நேரத்தை எடுத்துக் கொள்ளும் .
நமது பதிவில் உள்ள புகைப்படத்தை
நமது வலை தளத்தின் உள்ளயே பெரிதாக்கி திறக்க செய்வதன் மூலம் நமது வாசகா்களின் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன் அவா்களின் அபிமானத்தையும் பெற முடியும்
மேலே உள்ள படத்தை ஒரு முறை அழுத்தவும்
உதாரணமாக கீழேயுள்ள புகைப்படத்தை அழுத்திப்பார்க்கவும். அது எனது வலை தளத்தின் உள்ளயே புகைப்படம் பெரிதாக திறப்பதை பார்பீா்கள். மீண்டும் புகைப்படத்தை அழுத்தினால் பதிவை காண்பிக்கும்.


இதனை எவ்வாறு உங்களது வலை தளத்தின் கொண்டுவருவது என்று பார்ப்போம்.


1. உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள்


2. பின் Dashboardல் design > Edit HTML சென்று Expand your Widget Templates என்பதன் முன்னால் உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்


3. பின் கீழுள்ள HTML ல் நிரலில்
<head>
என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதன் கீழ்
<script src='https://sites.google.com/site/muruganandablogspotcom/muruganandam.js' 
type='text/javascript'/>
மேலே உள்ள வரிகளை நகலெடுத்து ஒட்டிவிடுங்கள்

4. இறுதியாக உங்கள் டெம்ளேட்டை சேவ் செய்யுங்கள்

இனி உங்கள் வலைப்பூ சென்று புகைப்படத்தில் கிளிக் செய்து பாருங்கள் உங்கள் பிளாக்கரின் உள்ளயே புகைப்படம் பெரிதாவதை காணலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்