உலகின் அதிவேக இணைய தொடர்பு


உலகில் இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள், எவ்வளவு வேகத்தில் இணைய இணைப் பினையும் தொடர்பினையும் வழங்கு கிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் (Pando Networks) என்னும் அமைப்பு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், அதிவேக இணைப்பு தரும் நாடுகளில் முதல்
இடத்தைப் பிடித்துள்ளதாக, தென்
கொரியா நாட்டில் இயங்கும் நிறுவனங்களைக் கண்டறிந்தது. இங்கு சராசரியாக, நொடிக்கு 2202 கிலோ பிட்ஸ் வேகத்தில் இணைய தொடர்பு இயக்கப்படுகிறது. ரொமானியா மற்றும் பல்கேரியா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இவை முறையே 1,909 மற்றும் 1,611 கிலோ பிட்ஸ் வேகத்தைத் தருகின்றன. முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகளில் உள்ள வேக இணைப்பிற்கு இடையே உள்ள வித்தியாசம் மூலம், தென் கொரியா நாடு எந்த அளவிற்கு இதில் முன்னேறியுள்ளது என்பதனை அறியலாம். காங்கோ நாடுதான் மிகவும் கீழாக, விநாடிக்கு 13 கிலோ பிட்ஸ் வேகத்தில் இன்டர்நெட் தொடர்பினை வழங்குகிறது. பொருளாதாரத்தில் உயர் நிலையை அடைந்துள்ள நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் கனடா நாடுகளில் உள்ள இன்டர்நெட் இணைப்பின் வேகம், அதிவேகம் என்ற எல்லைக்குள் வரவே இல்லை. 
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அதிவேக இணைப்பு தரப்படுவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா பன்னாட்டளவில் 26 ஆவது இடத்தையே பிடித்துள்ளது. நகரங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் கூட, முதல் பத்து இடங்களில் அமெரிக்க நகரங்கள் வரவில்லை.
இந்த ஆய்வு, இந்த ஆண்டில் ஜனவரி தொடங்கி ஜூன் வரை மேற்கொள்ளப் பட்டது. 224 நாடுகளில், இரண்டு கோடி கம்ப்யூட்டர் களில், இரண்டு கோடியே 70 லட்சம் டவுண்லோட் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. உலக அளவில் சராசரி இணைய இணைப்பு வேகம் நொடிக்கு 580 கிலோ பிட்ஸ் எனக் கண்டறியப்பட்டுள்ளது 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget