லாவா எஸ்12 என்ற பெயரில், தன் முதல் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை லாவா மொபைல்ஸ் நிறுவனம் அண்மை யில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி யுள்ளது. புதிய தோற்றத்துடன் லெதர் டச் கொண்டு இது வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில் முப்பரிமாண இன்டர்பேஸ் தரப்பட் டுள்ளது. இதில் 600 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசசர் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ப்ரையோ 2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.
3ஜி வை--பி, வை--பி ஹாட் ஸ்பாட் மற்றும் புளுடூத் இணைப்புகள் இயங்குகின்றன. நான்கு அலைவரிசைகளில் (GSM 850 / 900 / 1800 / 1900) இயங்குகிறது.
இது ஒரு கேண்டி பார் டைப் ஸ்மார்ட் போன். இதன் பரிமாணம் 117 x 57.5 x 13.4 மிமீ. எடை 120 கிராம். இதன் திரை 3.2 அங்குல அகலத்தில், கெபாசிடிவ் மல்ட்டி டச் வகையிலானது. 320 x 480 பிக்ஸெல் திறன் கொண்டது. 2 எக்ஸ் ஸூம் வசதி கொண்ட 5 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டு எப்.எம். ரேடியோ மற்றும் மியூசிக் பிளேயர் இயங்குகின்றன. ஜி.பி.எஸ். மற்றும் யு.எஸ்.பி.2 வசதிகள் உள்ளன. IMAP, POP3, SMTP, Push e-mail ஆகிய இமெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பலாம். காலண்டர், அலாரம் மற்றும் கால்குலேட்டர் போன்ற வழக்கமான வசதிகளும் உள்ளன.
1300 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 மணி நேரம் பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 16 நாட்களுக்குத் தக்க வைக்கிறது. இதன் நினைவகம் 120 எம்பி. இதனை 32 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட்கள் மூலம் அதிகப்படுத்தலாம். போனுடன் 2ஜிபி மெமரி கார்ட் வழங்கப்படுகிறது. கருப்பு மற்றும் பிரவுண் வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.8,200.