
உலகிலேயே மிகக் குறைந்த விலையில் அமைந்த ஆகாஷ் டேப்ளட் பிசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. மத்திய அமைச்சர் கபில் சிபல் இதனை வெளியிட்டு, மாணவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் இவை வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது வர்த்தக ரீதியாக இது பொதுமக்களுக்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
இணையதளத்தில் முன் கூட்டியே பதிந்து வைக்கலாம். உங்களுக்கு வீட்டில் வழங்கப்படுகையில் பணம் செலுத்தலாம். வாங்க விருப்பமுள்ளவர்கள் aakashtablet. com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லுங்கள். ரூ.2,500 என விலையிடப்பட்டுள்ளது. அடுத்த நிலையில் உள்ள Ubislate டேப்ளட் பிசி ரூ.2,999 என அதிக பட்ச விலையிடப்பட்டுள்ளது. இந்த Ubislate டேப்ளட் பிசி, ஜனவரி முதல் வாரத்தில் கிடைக்கும். ஆகாஷ் டேப்ளட் பிசி கீழ்க்காணும் அம்சங்களுடன் இருக்கும்.
7 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி இணைப்பு, யு.எஸ்.பி. வசதி, 366MHz+HD video வேக ப்ராசசர், 2 ஜிபி பிளாஷ் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி, 256 எம்பி ராம் மெமரி, மூன்று மணி நேரம் வரையிலான இயக்கத்திற்கு மின்சக்தி வழங்கக் கூடிய 2100 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவையாகும்.
இந்த தளம் சென்று தனி நபராக ஆர்டர் செய்கையில், நமக்குக் கிடைக்கும் பதில் அஞ்சலில், Ubislate டேப்ளட் பிசி க்கான ஆர்டர் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் கிடைக்கும் என்ற தகவல் தரப்படுகிறது. அநேகமாக ஆகாஷ் டேப்லட் பிசி தனி நபருக்கு இல்லாமல், கல்வி மற்றும் தொழில் நுட்பத்தில் கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிகிறது.