பாரத ரத்னா விருதுப் பரிந்துரையில் சச்சின் டக் அவுட்?


பாரத் ரத்னா விருது பெறுவதற்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ஹாக்கி மேதை தியான் சந்த்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதேசமயம், இந்த விருதைத் தருவதற்காகவே விதிமுறைகளில் திருத்தம் செய்ததாக கூறப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர் இடம் பெறவில்லை. அவரது பெயரை, இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்யவில்லை.



விளையாட்டு வீரர்களுக்கும் பாரத் ரத்னா விருது கிடைக்கும் வகையில் மத்திய அரசு சில சட்டத்திருத்தங்களை செய்தது. இந்திய விளையாட்டுத் துறை சார்பில் இதற்கு விண்ணப்பிக்கப்பட்டது இருந்தது. சச்சினுக்கு விருது கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திருத்தம் செய்யப்பட்டதாக சர்ச்சை வெடித்தது. இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.


அதேசமயம், சச்சினுக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கருத்துகளை தெரிவித்தனர். இருப்பினும் சச்சினுக்குத் தருவதற்கு முன்பு முன்னாள் ஹாக்கி வீரர் தியான் சந்த்திற்குத்தான் தர வேண்டும் என்று ஆதரவு குரல் எழுந்தது.


இந்த நிலையில், சச்சின் பெயரை விருதுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரி்நதுரைக்கவில்லை. இது பிசிசிஐயின் விருப்பமா அல்லது சச்சினின் வேண்டுகோளா என்பது தெரியவில்லை. இதையடுத்து தற்போது, தியான் சந்த், எவரஸ்ட் மலையில் ஏறிய முதல் நபர் டென்சிங் நார்வே ஆகியோரை பெயர்களை இந்திய விளையாட்டுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget