முட்டை தோசை சுவையாக இருக்க...
தோசைக் கல்லில் தோசை மாவை ஊற்றி அதன் மேல் முட்டை உடைத்து ஊற்றி உப்பு மிளகுத்தூள் தூவி விட வேண்டும். பிறகு ஒரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு தோசை ஊற்றவும். சுவையான முட்டை தோசை ரெடி.
கோதுமை மாவு புட்டு செய்ய...
கோதுமையை சுத்தம் செய்து நன்கு வறுத்து மிக்ஸியில் மாவாக திரித்து வைத்துக் கொள்ளவும். அந்த மாவில் சிறிது உப்புநீர் விட்டு புட்டுக்கு விரவுவது போல் விரவி இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்தால் சுவையான கோதுமை மாவு புட்டு தயார்.
ஆப்பம் சுவையாக இருக்க...
அரிசியை நன்றாக ஊறவைத்து நன்றாக ஆட்டி எடுத்து, இரவு படுக்கும் முன் சிறிது உப்பு, சோடா உப்பு கலந்து வைக்கவும். காலையில் ஆப்பசட்டியில் சுடவும். ஆப்பம் சுவையாக இருக்கும்.
உளுந்து வடை மிருதுவாக இருக்க...
உளுந்து வடைக்கு மாவு ஆட்டும்பொழுது சிறிதளவு துவரம் பருப்பை சேர்த்து ஆட்டினால் வடை மிருதுவாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும்.
வடகம் தயார் செய்ய...
பழைய சாதத்துடன் உப்பு, காரப் பொடி சேர்த்து பிசைந்து சிறு சிறு துண்டுகளாக வெளியில் காய வைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் வடகம் ரெடி.