
'புதிய படம் குறித்து ரசிகர்களுக்கு விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடுவேன்'' என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச்ச செயலகத்தில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்ததாக கூறினார். தனது உடல் நலம் குறித்து விசாரித்த
ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் ரஜினிகாந்த் கூறினார்.
புதிய படம் குறித்து ரசிகர்களுக்கு விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.