டி.என்.பி.எஸ்.சியில் குறை தீர்ப்பு மையம் அமைக்க முடிவு


தேர்வெழுதுபவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும், டி.என்.பி.எஸ்.சி. தலைமையகத்தில் ஒரு குறைதீர்ப்பு மையம் திறக்கப்படும் என்று அதன் தலைவர் திரு.நடராஜ் தெரிவித்துள்ளார். இந்த மையத்தில், சம்பந்தப் பட்டவர்கள் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ம் தேதி TNPSC தலைவராக பதவியேற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி ஆர்.நடராஜ், TNPSC தலைவர் என்ற முறையில் தனது திட்டங்கள் குறித்து கூறியதாவது, "இந்த மையமானது, சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும். TNPSC -ல் பலவிதமான பணிகளுக்காக விண்ணப்பிக்கும் லட்சக்கணக்கான மக்களுடன், TNPSC அதிகாரிகள் தொடர்புகொள்ளும் வகையில் எந்தவிதமான வசதியோ, திட்டமோ அல்லது செயல்முறையோ தற்போது கிடையாது.


TNPSC நடைமுறைகள் வெளிப்படையாக இருந்தால் மக்களுக்கு இதன்மீது அதிக நம்பிக்கைப் பிறக்கும். இந்த கமிஷனுக்கு ஆதரவளிப்பவர்களாகவும், அதன் வெற்றிக்கு முதுகெலும்பாகவும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், TNPSC பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும்.


குறைதீர்ப்பு மையம் கூடிய விரைவில் திறக்கப்படுவதோடு, வேறுவிதமான பயன்மிகு முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் நான் திட்டமிட்டு வருகிறேன்", என்றார்.


சமீப காலங்களில், மிக மோசமான ஊழல் புகார்களில் சிக்கி, தனது பெயரை ஏகத்துக்கும் TNPSC கெடுத்துக் கொண்டதால், அதன் தலைவர் பதவிக்கு, நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget