மலிவான விலையில் வீடியோ விளையாட்டு டேப்லெட்


டேப்லெட் சந்தை அசுர வளர்ச்சி அடைந்து வருவதால் டேப்லெட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தமது புதிய டேப்லெட்டுகளில் புதிய புதிய தொழில் நுட்புங்களையும் மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் புதிய சிறப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்துகின்றன.
குறிப்பாக கேமிங் டேப்லெட்டுகளுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. அதை மனதில் வைத்து ஜேஎக்ஸ்டி நிறுவனம் இப்போது ஜேஎக்ஸ்டி எஸ்7100 என்ற புதிய வீடியோ கேமிங் டேப்லெட்டை களமிறக்குகிறது.
இந்த ஜேஎக்ஸ்டி எஸ்7100 டேப்லெட் 800 x 480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இதன் டூவர் கோர் கார்டெக்ஸ் ஏ 9 ப்ராசஸர் இந்த டேப்லெட்டிற்கு அசுர வேகத்தைக் கொடுக்கும்.   இந்த டிவஸ் 512 எம்பி சிஸ்டம் மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் இன்டர்னல் சேமிப்பு வசதி 16 ஜிபி ஆகும்.
இணைப்பு வசதிக்காக இந்த எஸ்7100 டேப்லெட் வைஃபை மற்றும் எச்டிஎம்ஐ இணைப்பைக் கொண்டுள்ளது.  இது ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆகும். இது ஆன்ட்ராய்டு 2.2 ப்ரோயோ இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதன் பேட்டரி 4 மணி நேர வெப் பிரவுசிங் அல்லது 10 மணி நேர மியூசிக் ப்ளே பேக் ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த எஸ்7100 டேப்லெட் ஒரு போர்ட்டபுள் கேமிங் டேப்லெட். விளையாட்டை இயக்கும் பட்டன்கள் அனைத்தும் இந்த டேப்லெட்டின் பக்கவாட்டில் உள்ளன. இதன் 7 இன்ச் டிஸ்ப்ளே வீடியோ பார்ப்பதற்கும் மற்றும் வீடியோ கேம் விளையாடுவதற்கும் மிக அற்புதமாக இருக்கும்.
இதில் இன்னொரு வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த எஸ்7100 டேப்லெட் சாம்சங் கேலக்ஸி IIல் உள்ள ப்ராசஸ் மற்றும் க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட்டைக் கொண்டிருக்கிறது. இதன் ப்ராசஸர் எல்லாவிதமான வீடியோ கேம்களையும் சப்போர்ட் செய்யும். ஆனால் அதற்காக க்ளாசிக் கேம்ங்களின் ஆர்ஒஎம்எஸ்ஸை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இந்த டிவைசில் உள்ள ஐகான்கள் ஆப்பிளின் ஐகான்களை ஒத்திருக்கின்றன. ஆனால் இந்த டேப்லெட்டின் யூசர் இன்டர்பேஸ் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்த ஜேஎக்ஸ்டி எஸ்7100ன் விலை ரூ.10000க்குள் இருக்கும். மற்ற டேப்லெட்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதன் விலை மிகக் குறைவாகும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget