தமிழ்த் தட்டச்சு முறைகள்

தமிழ்த் தட்டச்சு முறைகள் என்பது கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான பல்வேறு முறைகளைப் பற்றியதாகும். தமிழில் பல வகையான மென்பொருட்கள் மற்றும் எழுத்துருக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் விசைப்பலகை அமைப்பு, எழுத்து வகைகள், எழுத்துரு அமைப்புகள் போன்றவைகளும் தனித்தனியாக இருக்கின்றன. இதனால் இணையத்திற்கான தமிழ் எழுத்துருக்களைப் பலரும் தனித்தனியாக அவர்கள் வசதிக்குத் தகுந்தபடி தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
விசைப்பலகை
கணிப்பொறியில் தமிழைத் தட்டச்சு செய்யும் விசைப்பலகை அமைப்புகள் பல இருக்கின்றன. கீழ்காணும் நான்கு தட்டச்சு முறைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை
- தமிழ் 99 விசைப்பலகை
- உச்சரிப்பு வழி விசைப்பலகை
- மாற்றுமொழி விசைப்பலகை
- பிற விசைப்பலகைகள்
எழுத்துரு வகைகள்
கணிப்பொறியில் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் எழுத்துருக்களில் அவை உருவாக்கப்பட்ட அடிப்படையைக் கொண்டு அதன் வகைகள் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் மூன்று வகைகள் அதிகப் பயன்பாட்டில் இருக்கின்றன.
- உண்மை வடிவ எழுத்துரு
- திறந்த வடிவ எழுத்துரு
- ஒருங்குறி எழுத்துரு
- பிற எழுத்துருக்கள்
எழுத்துரு அமைப்புகள்
பிற மொழிகளை அடிப்படையாகக் கொண்டு சில தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் குறிப்பாக நான்கு வகைகள் அதிகப் பயன்பாட்டில் இருக்கின்றன.
- தமிழ் தனி மற்றும் இரு மொழி வடிவம்
- அமெரிக்கத் தரக் குறியீட்டின் தகவல் உள்மாற்றம்
- தமிழ் தரக் குறியீட்டின் தகவல் உள்மாற்றம்
- இந்தியத் தரக் குறியீட்டின் தகவல் உள்மாற்றம்
பயன்பாடு
தமிழ் எழுத்துருக்களில் மாற்று மொழி விசைப்பலகை மூலம் அம்மா (ammaa) என்று தட்டச்சு செய்வது எளிதாக இருப்பதால் இந்த விசைப்பலகையைப் பயன்படுத்தியுள்ள எழுத்துருக்களைத் தட்டச்சு செய்ய அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். சிலர் தமிழ்நெட்-99 எழுத்துருவைப் பயன்படுத்துகின்றனர்.
ஒருங்குறி அமைப்பு எழுத்துருக்கள் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் கணிப்பொறியில் புதிய இயக்கச் செயலிகளை நிறுவியிருந்தால் குறிப்பிட்ட எழுத்துருவை நிறுவாவிட்டாலும் எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன. எனவே ஒருங்குறி எழுத்துருவை பயன்படுத்தும் வழக்கம் இப்போது தமிழ் இணைய தளங்களில் அதிகரித்திருக்கிறது.