திருநங்கையை உதவியாளராக வைத்துள்ள அனுஷ்கா

அந்த அதிர்ஷ்டக்கார திருநங்கை யார் என்று தானே நினைக்கிறீர்கள்?
வானம் படத்தில் அனுஷ்காவுடனேயே இருப்பாரே ஒரு திருநங்கை அவர் தான் அந்த அதிர்ஷ்டசாலி. அந்த உயர்ந்த நடிகைக்கு தனது உதவியாளர் மீது அவ்வளவு பாசமாம். தான் நடிக்கும் படங்களில் ஏதாவது சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பளிக்கும்படி கேட்கிறாராம்.
அதனால் அந்த திருநங்கை சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஆறடி இருக்கும் அனுஷ்கா அவரது இந்த செயலினால் மேலும் உயர்ந்து விட்டார்.