செங்காத்து பூமியிலே திரை விமர்சனம்


பாரதிராஜாவின், "கிழக்கு சீமையிலே" படத்திற்கு கதை எழுதிய பேராசிரியர் ரத்னகுமாரின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் கிராமத்து காதல், மோதல் கதைதான் "செங்காத்து பூமியிலே!"
கிழக்கு சீமையிலே படத்தில் பெண் கொடுத்து, கிராமத்து மாமன்-மச்சான்களுக்குள் ஏற்படும் ஈகோ பிரச்னையையும்,
அக்குடும்பபெண்களுக்கு இடையேயான பாசப்போராட்டத்தையும் கதையாக்கியிருந்த ரத்னகுமார், செங்காத்து பூமியிலே படத்தில் பெண்ணை கொடுத்து, எடுத்து கொள்வதற்குள் ஏற்படும் ஈகோ மோதல்களையும், அக்குடும்ப பெண்களின் பாசப்போராட்டத்தையும் கதையாக்கி, அதை காட்சிகளாக இயக்கவும் செய்து, ஈரம் இல்லாதோர் நெஞ்சத்திலும் ஈரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவரது இயக்கத்தில் பவன்-சுனுலட்சுமி, செந்தில்-பிரியங்கா ‌ஜோடிகளும் அழகன் தமிழ்மணி, வெள்ளைபாண்டி, ஸ்டாலின், சிங்கம்புலி உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!


இசைஞானி இளையராஜாவின் இனிய இசையும், கார்த்திக்ராஜாவின் அழகிய ஒளிப்பதிவும் இப்படத்தின் பெரியபலம்! ரத்னகுமாரின் எழுத்து, இயக்கத்தில் உறவுகளுக்குள் உரசல் வேண்டாம் எனும் கருத்தை உரக்க சொல்லி வெளிவந்திருக்கும் "செங்காத்து பூமியிலே" படம் அல்ல "பாடம்"!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget