மனித உலகில் பேசும் தாவரங்கள் கண்டுபிடிப்பு!

செடி, கொடிகள் போன்ற தாவரங்கள் ஒன்றுடன், ஒன்று பேசிக் கொள்கின்றன என்று இங்கிலாந்து நாட்டில் உள்ள எக்ஸ்டெர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். முட்டைகோஸ் கொடியானது ஆபத்து வரலாம் என உணர்ந்தால் தனது இலைப் பகுதியில் சிறிய வெடிப்பை ஏற்படுத்துகிறது.
இதன் மூலம் ஒருவித வாயுவை வெளியேற்றி, ஒலியை ஏற்படுத்தி பக்கத்தில் உள்ள செடியை எச்சரிக்கை செய்கிறது. இதனை நுட்பமான கேமராவின் மூலம் ஆய்வு செய்து முதன் முறையாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.