பேஸ்புக் போட்டோ வியூவர் வசதியை அறிமுகபடுத்தியது!


புதிய வசதி ஒன்றை ஃபேஸ்புக் உருவாக்கி இருக்கிறது. போட்டோ வியூவர் என்ற புதிய வசதியை வழங்கி உள்ளது பேஸ்புக். முன்பெல்லாம் ஏதேனும் புகைப்படம் அப்லோட் செய்யப்பட்டால் அதற்கு கீழ் பகிர்ந்து கொள்ளப்பட்ட செய்திகள் வெளியாகும். ஆனால் இந்த போட்டோ வியூவர் வசதி பயன்படுத்தினால் பாதி பக்கத்தில் புகைப்படம் பெரிதாகவும், மீதம் உள்ள பாதி பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட செய்திகளையும் தெளிவாக காட்டுகிறது
பேஸ்புக்.
இதனால் புகைப்படத்திற்கும் கீழ் உள்ள தகவல் பரிமாற்றங்களை பார்க்க நீண்ட நேரம் ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்த ஃபோட்டோ வியூவர் வசதி கூகுள் ப்ளஸில் தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. அந்த வசதியை இப்பொழுது பயன்படுத்தி உள்ளது ஃபேஸ்புக். இந்த ஃபோட்டோ வியூவர் வசதி பேஸ்புக் பக்கத்தை தெளிவாகவும் புதுமையாகவும் காட்டும்.
காதலர் தின ஸ்பெஷலாக நிறைய புதிய வசதிகளை உருவாக்கி வரும் ஃபேஸ்புக், காதலர் தினத்திற்காக மட்டும் அல்லாமல் தினம் தினம் புதுமைகளை உருவாக்கிய வண்ணம் இருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்