விக்கெட்டுக்காக அம்பயர்களுடன் போராடிய டோணி!


முத்தரப்புத் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஒரு சர்ச்சை கிளம்புவது வாடிக்கையாகி வருகிறது. இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய இன்றைய வாழ்வா சாவா போட்டியிலும் இது எதிரொலித்தது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா 119 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்திருந்த நிலையில் 24-வது ஓவரில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது.



24-வது ஓவரில் டேவிட் ஹஸ்ஸியும் வேடும் ஆடிக் கொண்டிருந்த போது அஸ்வின் பந்தில் ஒரு ரன் வேட் எடுத்தார். இன்னொரு ரன்னுக்கு முயற்சித்தபோது ஹஸ்ஸி தம்மீது பந்து படாமல் இருக்க தடுத்தார்.


இதை டோணி கடுமையாக ஆட்சேபித்து அவுட் கேட்டு நடுவர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். ஐசிசி விதிமுறைப்படி பந்தை தடுக்க முயன்றார் டேவிட் ஹஸ்ஸி, எனவே அவருக்கு அவுட் தர வேண்டும் என்பது டோணியின் வாதம்.


இதையடுத்து மூன்றாவது அம்பயரின் பஞ்சாயத்துக்குப் போனது. ஆனாலும் டோனியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பந்து தன் மீது தவிர்க்கவே ஹஸ்ஸி முயன்றதாக மூன்றாவது நடுவர் பிரை கூறி விட்டார்.


இதனால் டோனி அதிருப்தி அடைந்த நிலையில் சிறிது நேரம் காணப்பட்டார். ஏற்கனவே இலங்கைக்கு எதிரான போட்டியின் போது இலங்கை வீரர் திரிமன்னே அவசரக் குடுக்கையாக ஓடிக் கொண்டிருந்ததால் அவரது பைல்ஸை தட்டி விட்டு ரன் அவுட் கோரினார் இந்திய வீரர் அஸ்வின். ஷேவாக்கும் அவுட் கேட்டார். ஆனால் வேகம் வேகமாக சச்சின் டெண்டுல்கர் ஓடி வந்து ஷேவாக்கிடம், அவுட் கேட்க வேண்டாம் என்று காதில் ஓதியதும், அவுட் கேட்காமல் விட்டு விட்டார் ஷேவாக் என்பது நினைவிருக்கலாம்.


ஆனால் இன்று டோணி அவுட் கேட்டும் அது கொடுக்கப்படாமல் போனது. இந்த ஏமாற்றம் அவரது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget