பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்று ஆசைப்படும் அசினுக்கு ஷாருக் கானுடன் நடிக்க ரொம்ப ஆசையாக உள்ளதாம்.
கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமீர் கான் ஜோடியாகி பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அசின். அம்மணி பாலிவுட் பக்கம் போனதில் இருந்தே தென்னிந்தியாவை மறந்துவிட்டார்.
அங்கு அவர் சல்மான் கான், அஜய் தேவ்கன் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடி்ததுவிட்டார். தற்போது ஹவுஸ்புல் 2 என்ற படத்தில் அக்ஷய் குமார் மற்றும் போல் பச்சன் படத்தில் அபிஷேக் பச்சனுடன் ஜோடி சேர்நதுள்ளார்.
பாலிவுட்டில் உள்ள பெரிய ஹீரோக்களுடன் நடித்தாகிவிட்டது. ஆனால் இன்னும் 'சக்கவர்த்தி' ஷாருக்கானுடன் டூயட் பாடவில்லையே என்று அசினுக்கு ஏக்கம். இந்நிலையில் சஜித் நாதியத்வாலாவின் 2 ஸ்டேட்ஸ் படத்தில் அசின் ஷாருக்கானுடன் ஜோடி சேர்கிறார் என்று கூறப்படுகின்றது. பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறதாம்.
சல்மான் கானுடன் காதல், திருமணம் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டவர் அசின். இந்நிலையில் சல்மானின் வைரியான ஷாருக்குடன் நடிக்கப் போகிறார். இதனால் இனியும் சல்மான் அசினுக்கு சப்போர்ட் பண்ணுவாரா என்பது தான் பலரது கேள்வி.
அதேசமயம் ஷாருக் கான், தற்போது சல்மானின் முன்னாள் காதலியான கத்ரீனா கைபுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.