வளர்ந்து வரும் தலை முறையில் தொழில் நுட்பத்தின் விந்தை நாளுக்கு நாள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தொழில் நுட்ப உலகில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளது. உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கிளாஸை உருவாக்கி உள்ளது கூகுள்.
இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால் போதும், கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை எளிதாக பார்க்கலாம். ஏனெனில் இத்தகைய உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கூகுள் கிளாஸில் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு இதில் முகப்பு கேமராவும் உள்ளது.
கேட்பதற்கே சற்று வினோதமான வசதியை உருவாக்கி இருக்கிறது கூகுள் நிறுவனம். இதை ஆப்பரேட் செய்யும் முழு விவரங்களை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது கூகுள். இன்னும் இது பற்றிய தகவல்களை காத்திருந்த தான் பெற வேண்டும்.