ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பார்களா?

இந்தியா & இலங்கை
 இடையே பண்டைய ராமர்
 (இராமாயணம்) பாலத்தின்
 நாசாவிண்கல புகைபடங்கள்
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு தனது நிலையை நாளை (மார்ச் 29) தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலாவது பதவிக் காலத்தில், கடந்த 2005ம் ஆண்டு ஜுலை மாதம் 2ம் தேதி சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கின.இந்தியா-இலங்கைக்கு இடையிலான பாக் ஜலசந்தி, ராமர் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி, அதை கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றுவது இந்தத்

திட்டத்தின் நோக்கமாகும். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையை சுற்றாமல், சேது கால்வாய் வழியாக வங்கக் கடலை நேராக அடைய முடியும்.


இந்தப் பணி தொடங்கி நடந்து கொண்டிருந்தபோது, வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் பாலத்தை தகர்க்க எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கலாயின. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சேது சமுத்திரத்திட்டத்துக்கு தடை விதித்தது.


மேலும், ராமர் பால பகுதி வழியாக நிறைவேற்றுவதற்கு பதிலாக தனுஷ்கோடி வழியாக இந்தத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றும் வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.


இதையடுத்து இந்த மாற்றுப் பாதை குறித்து ஆராய சுற்றுச்சூழல் வல்லுனர் ஆர்.கே.பச்செளரி தலைமையில் ஒரு கமிட்டியை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்தார். இந்தக் கமிட்டி நீண்ட காலம் ஆய்வு நடத்தி தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்து விட்டது. ஆனால் அதை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்னும் தாக்கல் செய்யவில்லை.


இதையடுத்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், பச்செளரி கமிட்டி அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதைத் தொடர்ந்து அந்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வார காலம் அவகாசம் வழங்கியது.


இந் நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். தத்து, அனில் ஆர். தவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது, சுப்பிரமணிய சாமி நேரில் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறுகையில், சேது சமுத்திரத் திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் ஆறாவது வழித்தடத்தில் ராமர் பாலம் இருப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். அதனால் அந்தப் பகுதியைத் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டன. கடந்த ஜனவரி மாதம் கூட இது குறித்து மத்திய அரசின் நிலையை உச்ச நீதிமன்றம் கேட்டது. ஆனால், இதுவரை மத்திய அரசு பதில் தெரிவிக்கவில்லை என்றார்.


இதையடுத்து பேசிய மத்திய அரசின் கூடுதல் தலைமை சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், குறிப்பிட்ட இடத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமானால் அதற்கு மத்திய அமைச்சரவைச் செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டும். அதே போல், சேது கால்வாய் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து வரும் பச்செளரி குழுவின் அறிக்கையை இறுதி செய்யவும் கால அவகாசம் தேவைப்படுகிறது. அவசர கதியில் ஆய்வுகளை நடத்த இயலாது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.


அப்போது குறுக்கிட்ட சாமி, பச்செளரி குழு அறிக்கையின் நகலை என்னிடம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.


இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவலிடம் நீதிபதி தத்து, பழமையான ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவித்து விடலாமா? இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசு துறைகளில் அறிவுரைகள் பெற்று தெரிவியுங்கள். அரசு பதில் அளிக்கத் தவறினால், அதன் கருத்து கேட்கப்படாமல் விசாரணை நடத்தப்படும் என்றார்.


பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சேது சமுத்திர திட்டம் தொடர்பான ஆய்வை முடிக்கவும் அறிக்கை தயாரிக்கவும் அதிக காலம் ஆகிறது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. அதனால், பச்செளரி குழுவின் அறிக்கையை 6 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் நகலை சுப்பிரமணிய சாமிக்கு அளிக்க வேண்டும் என்று அறிவித்தனர்.


மேலும் வழக்கின் அடுத்த விசாரணை நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்தனர்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget