தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதம் (ஏப்ரல் 13) முதல் தேதி மிகவும் சிறப்பான நாள். அன்றைய தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர். எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். மலர்கள் மலருமு, சகல நற்காரியங்களையும், செய்வதற்கேற்ற காலம்இது. சித்திரை வருஷப்பிறப்பினை கேரள மக்கள் விஷூக்கனிகாணல் என்று கொண்டாடுவர் முதல் நாள் இரவு பூஜை அறையை
சுத்தம் செய்து திருவிளக்கின் முன் கோலமிட்டு பூ, பழம், வெற்றிலை பாக்கு அணிகலன்கள், முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவற்றை வைப்பர். புத்தாண்டு தினத்தன்று அதிகாலை வீட்டில் உள்ள பெரியவர் ஒருவர் எழுந்து குளித்து பூஜை அறைகளில் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்த பின் வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி பூஜை அறைக்கு அழைத்து வருவர். அவர்கள் கண்களை திறக்காமல் மூடிய நிலையிலேயே வந்து பூஜை அறையில் வைத்துள்ள விளக்குகள் அருகில் வந்து கண்களை திறப்பர். முதலில் கடவுளின் திருஉருவப்படங்களையும், ஏற்றிய விளக்கினையும், மாங்கல்யப் பொருட்களையும் பார்ப்பதால் அந்த ஆண்டு மகவும் மகிழ்ச்சிதரும் தமிழ் வருடப்பிறப்பினை முன்னிட்டு திருப்பதி, திருப்பதி, திருத்தனி, முதலான கோயில்களுக்கு சென்று தரிசித்து வருகின்றனர். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாளை கேரள மக்கள் கொன்னம்பூ வைத்து பூஜிக்கின்றனர்.
சித்ரா பௌர்ணமி : இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒர நாள் முன் - பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல ""மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இரவு நேரத்தில் சித்திரபுத்திர நாயனார் கதையும் சொல்வதுண்டு, திருவண்ணாமலையிலும், காஞ்சிபுரத்திலும், சித்திரகுப்தனுக்கு தனியாக ஒரு கோயில் உள்ளது. சித்ரா பௌர்ணமி தினத்தில் பூஜைகள், புறப்பாடும் உற்சவமும் நடைபெற்று வருகிறது. இதே போல் குற்றாலம் மலைமீதுள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆதி நாளிலிருந்தே தமிழர் கொண்டாடும், திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி நடைபெறும், சித்திரை திருவிழா தனிச்சிறப்புடையது. தென்னாட்டு கோவில்களில் குறிப்பிடத்தக்க மதுரை கோயிலில் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. அதே போல் திரு நங்கைகள் (அரவாணிகள்) கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழாவும், சித்ரா பவுர்ணமி அன்றுதான் நடைபெறுகிறது. சித்திரை திருநாளில் சித்திர குப்தனை வணங்குவோம். சிறப்பு பலபெறுவோம். மேலும் இந்த (நந்தன) தமிழ் புத்தாண்டை தமிழர்கள் மட்டுமின்றி வங்காளிகள் நவபர்ஷா என்றும், காஷ்மீர் மக்கள் நவ்ரே புத்தாண்டு என்றும், சிந்து மகாணாத்தில் வசிக்கும் சிந்து இனத்தவர்கள் சேட்டி -சந்த் என்றும், கேரள மக்கள் விஷீகனிபார்த்தல் (விஷூ கனி காணுதல்) என்றும் கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். கேரளா கோயில்களில் பூஜையின் போது அர்ச்சகர்கள் பூஜையில் வைத்து பக்தர்களுக்கு கொடுக்கும் பணத்தை கைநீட்டம் என கூறுவதுண்டு. நித்திரைக்கு விடை கொடுக்கும் சித்திரையே வருக. எம் தேசத்து மக்களுக்கு சிறப்பான வாழ்வை அருள்க!