கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ்


4. லீலை
பல வருடங்கள் பெட்டிக்குள் இருந்து ‌ரிலீஸாகியிருக்கும் படம். வசூல் மிகச் சுமார். இத்தனைக்கும் படம் பரவாயில்லை என்ற பாராட்டைப் பெற்றிருக்கிறது. ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்க்கும் நட்சத்திர‌க் கலைஞர்கள் இல்லாததும் ஒரு காரணம். சென்ற வார இறுதியில் இப்படம் 1.8 லட்சங்களை வசூலித்துள்ளது.
இதுவரையான இதன் சென்னை வசூல் 13 லட்சங்கள்.


3. 3
மூன்றாவது இடத்தில் 3. ஐந்து வாரங்கள் முடிந்த நிலையில் வார இறுதியில் இப்படம் 2.19 லட்சங்களை வசூலித்திருக்கிறது. இதுவரை இதன் சென்னை வசூல் 5.47 கோடிகள்.


2. வழக்கு எண் 18/9
இந்தப் படம் விமர்சகர்களின் ஒட்டு மொத்தப் பாராட்டைப் பெற்றிருக்கிறது. ரசிகர்கள் இன்னும் அதிகமான ஆதரவை‌த் தந்திருக்கலாம். சென்னையில் வெளியான முதல் மூன்று தினங்களில் 52.3 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது.


1. ஒரு கல் ஒரு கண்ணாடி
சென்ற வார இறுதி வசூலிலும் ஓகே ஓகே படமே முதலிடத்தில் உள்ளது. ஆச்ச‌ரியமாக சென்ற வார இறுதியிலும் வசூலில் ஒரு கோடியை‌த் தாண்டியிருக்கிறது இப்படம். இதன் சென்ற வார இறுதி வசூல் 1.29 கோடி. இதுவரை சென்னையில் மட்டும் 7.85 கோடிகளை வசூலித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்