
சினேகா - பிரசன்னா திருமண நிகழ்வுகள் ஆரம்பமாகிவிட்டன. முதல் நிகழ்ச்சியாக மணமகள் சினேகாவுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது.
பச்சைப் பட்டுப் புடவை, தங்க நகைகள் சகிதம் ஜொலி ஜொலித்த சினேகாவுக்கு அவர்கள் சமூக முறைப்படி நலங்கு வைக்கப்பட்டது. நலங்குப் பாடல்கள் பாடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சினேகாவின் நெருங்கிய வட்டத்தில் உள்ள நடிகர் நடிகைகள் பங்கேற்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
சினேகா - பிரசன்னா திருமணம் நாளை மறுநாள் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
அதற்கு முன் நாளை மாலை இதே மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.