பிகினியில் பின்னி பெடலெடுக்கும் தீபிகா!


தீபிகா படுகோன் காக்டெயில் படத்தில் ஆரஞ்ச் பிகினியில் தோன்றும் காட்சியைப் பற்றிதான் இப்போது பாலிவுட்டில் அதிகம் பேசிக் கொள்கிறார்கள். ரசிகர்கள் ஹீட்டாகவும், சக நடிகைகள் தீபிகாவின் ஃபிட்னெஸ் குறித்து சீகரெட்டாகவும் பேசும் விஷயங்களை ஓபனாக அடித்திருக்கிறார் தீபிகா. முதலில் ஃபிட்னெஸ். பிகினியில் தோன்றும் தைரியத்தை எந்தவொரு நடிகைக்கும் தருவது அவரது ஃபிட்டான உடல்தானே.

டயட்டும், உடற்பயிற்சியும் என்னுடைய வாழக்கை முறையின் ஓர் அங்கம். இரண்டையும் நான் தவறவிடுவதில்லை. ஆனால் சிலர் டயட்டில் கன்ட்ரோல் இல்லாமலிருந்துவிட்டு திடீரென உடல் பருமனை குறை‌க்க பட்டினி கிடக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. பருமனாக இருக்கிறோமோ சைஸ் ‌ஸீரோவாக இருக்கிறமோ... ஃபிட்னெஸ்தான் முக்கியம். சில‌ர் பருமனாக இருந்தாலும் அவர்களின் ஸ்டெமினா அபாரமாக இருக்கும். 


பிகினியில் நடித்ததை கேப் டவுனில் படமாக்கினோம். அந்தக் காட்சிக்காக நான் பெ‌ரிதாக எதுவும் செய்யவில்லை. என்னுடைய டயட்டை கொஞ்சம் மாற்றிக் கொண்டேனே தவிர பட்டினி எல்லாம் இருக்கவில்லை என்று தெ‌ரிவித்துள்ளார்.


ஏதோ யோகா மாஸ்டர் அட்வைஸ் செய்றது போலிருக்கிறதில்லையா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்