ஐஸ்வர்யாராயின் மகளின் படத்துக்கு போட்டா போட்டி!


அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதியின் மகள் ஆராதயாவின் புகைப்படத்தை அட்டையில் பிரசு‌ரித்து சமூக கடமையாற்ற இந்தி மீடியாக்கள் துடிக்கின்றன. அவர்கள் கடமையாற்ற முடியாதபடி ராணுவ பாதுகாப்புடன் மகளை ஒளித்து வைத்திருக்கிறது இந்த தம்பதி. இந்த கேட் அண்ட் மௌஸ் விளையாட்டில் இந்தியர்களைவிட அமெ‌ரிக்கர்கள் கெட்டிக்காரர்கள். விட்டால் செலிபி‌ரிட்டிகளின் பாத்ரூம்வரை
செல்லக் கூடியவர்கள். சமீபத்தில் நியூயார்க் சென்ற ஐஸ்வர்யாராயையும், அவரது மகளையும் கிடைத்த சின்ன கேப்பில் கேமராவில் சுட்டுவிட்டார்கள். இந்த அரைகுறை போட்டோவை வைத்து ஆராதயா அப்பா ஜாடை, இல்லை அம்மா ஜாடை, இல்லையில்லை புருவம்தான் அம்மா மற்றதெல்லாம் அப்பா என்று ஆளாளுக்கு ஏ‌ரியா பி‌ரித்து விளையாடுகிறார்கள்.


உங்களுக்கும் பொழுது போகவில்லையென்றால் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து ஆராதயா யார் ஜாடை என்று புது விளையாட்டை தொடங்கலாம். வாரப்பத்தி‌ரிகைகள் ஆராதயா யார் ஜாடை என்று ஆயிரம் ரூபாய் போட்டி வைக்கும் போது பயன்படும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்