எம்.கே.எல. புரொடக்சன்ஸ் சார்பில் ஜெயக்குமார் தயாரித்து இயக்கி வரும் படம் கனல். திரில்லர் கதையில் உருவாகி வரும் இப்படத்தில் மதுவில் இருப்பது போதையா, மங்கையில் இருப்பது போதையா- என்றொரு அயிட்டம் பாடலுக்கு அதிரடி குத்தாட்டம் போட்டுள்ளார் பாபிலோனா. இதற்கான படப்பிடிப்பு ஜோலார்பேட்டைக்கு அருகில் உள்ள சின்னமூக்கனூர் பகுதியில் நடந்தபோது, பாபிலோனாவை பார்க்க பெருங்கூட்டம் அலைமோதியதாம். இதனால் கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க படக்குழுவினர் பெரும் அவதிப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அந்த பாடலில் டூபீஸ் உடையணிந்து நடனமாட இருந்த பாபிலோனா, அது கிராமம் என்பதால், ஒரு வீட்டிற்குள் உடை மாற்றிவிட்டு, அந்த ஊரின் தெருவில் சாதாரணமாக நடந்து வந்திருக்கிறார். டூ-பீஸ் உடையில் அவர் நடந்து வந்ததால் அதை பார்க்க அஙகு கூடியிருந்த இளசுகள் முதல் பெருசுகள் வரை தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டுள்ளனர். அதில் சில இளவட்டங்கள் பாபிலோனாவின் உடம்பில் சீண்ட, அங்கே ரகளை ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கூட்டத்தில் தடியடி நடத்தி பாபிலோனா ஸ்பாட்டுக்கு வர உதவி செய்துள்ளனர். இதையடுத்து அந்த பாடல் காட்சியில் நறுக் ஆட்டம் போட்டிருக்கிறார் பாபிலோனா. இப்பாடல் கனல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ஜெயக்குமார்.