
இந்த வாரம் வெள்ளிக்கிழமை தாண்டவம் படம் மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது. பெரிய படம் என்பதால், இந்தப் படத்துடன் வேறு படங்கள் போட்டியிடவில்லை. யுடிவி தயாரிப்பில், இயக்குநர் விஜய் உருவாக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம்-அனுஷ்கா -எமி ஜாக்ஸன் - ஜெகபதி பாபு நடித்துள்ளனர். ஜிவி. பிரகாஷ்குமார் இசையமைக்க, பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார்.
கதைப் பிரச்சினை, தலைப்புப் பிரச்சினை, உதவி இயக்குநர்கள் எதிர்ப்பு என பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.
சென்னையில் மட்டும் 55 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் 750-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகியுள்ளது.
படம் பற்றி எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்ததால், அட்வான்ஸ் புக்கிங் திருப்திகரமாக இருந்ததாக திரையரங்குகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தோடு ராகவா லாரன்ஸ் இயக்கிய தெலுங்குப் படம் ரிபெல், பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்திப் படம் கமால் தமால் மலாமால், அக்ஷய் குமாரின் ஒ மை காட், ஹாலிவுட் படம் ரெஸிடென்ட் ஈவில் ஆகியவையும் வெளியாகின்றன.