தாண்டவம் திரை விமர்சனம்


என்னடா கஷ்ட்டபட்டு எடுத்த படத்த இப்படி சிம்பிளா கம்பேர் பண்ணுறான்னு நினைக்குறீங்களா. கஜினி படம் எந்த மாதிரியான மெத்தேட் படமோ அதே மெத்தேட் தான் இதுவும். இந்த படத்தோட கதையை பத்தி சொல்ல விரும்பல.... மற்ற பதிவர்களையும் அதையேதான் கேட்டு கொள்கிறேன். பாக்க போற நீங்க கண்டிப்பா என்ஜாய் பண்ணுவீங்க. கஜினி படம் பாக்கும் போது எப்படியெல்லாம் பீல்
பன்னுனேர்களோ, அதே பீல் தான் இந்த படமும் உங்களுக்கு இம்மிகூட பிசகாமல் கொடுக்கும்.

அப்படீன்னா அந்த ப்ளாஷ்பேக் காதல், எக்சேக்ட்லி தி சேம். அட்டகாசமான ப்ளாஷ்பேக்.

என்ன ஒரு விஷயம், கஜினி-ல ஹீரோவ பத்தி தெரிஞ்சுக்காமலேயே ஹீரோயின் இறந்து விடுவாள். ஆனால் இதில் அது தெரிஞ்சுடும், ஆனால் அது கவிதை மாதிரி இருக்கும். அத கொஞ்சம் யூகிக்க முடிவதால். அந்த மரணத்தால் ஏற்படும் பீல் கஜினியை விட கொஞ்சம் கம்மிதான்.

விக்ரம், என்னே நடிப்பு... சான்ஸே இல்ல... அனுஷ்கா, எம்மா நீ தான் தமிழ்-ல நம்பர் ஒன்னு... பின்னிட்ட.. சந்தானம் கம்மியா வந்தாலும் அவர் டைமின்க் டயலாக் போலவே காட்சிகளும்.. காமெடி அட்டகாசம். நாசர், எமி, லக்ஷ்மி ராய், ஜெகபதிபாபு, ஷாயாஜி ஷிண்டே, சரண்யா, இன்னும் பெயர் மறந்த பலரும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

போனவாரம் வந்த "சாட்டை" படத்தில பெரும்பாலான கேரக்டர் மனசுல நிக்கலன்னு எழுதி இருந்தேன். ஆனால் இந்த படத்தில் வர்ற முப்பதுக்கும் மேற்பட்ட கேரக்டர் என் மனுசுல நிழலாடுது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உள்ள தனித்தன்மைதான் இதற்க்கு காரணம்.

அதிலும் M.S.பாஸ்கர்-ன் மாப்பிள காமெடி சூப்பர்.  தம்பி ராமையாவின் "தப்பாச்சே" காமெடியும் அட்டகாஷம்.

சிவா & கென்னியா "விக்ரம்", அனுஷ்கா (அவர் கேரக்டர் சஸ்பென்ஸ்), விக்ரம் நண்பரா ஜெகபதி பாபு (இவர் கேரக்டர் பத்தின சஸ்பென்ஸ் எதிர்பார்த்ததுதான்), லண்டன் மாடலா எமி, அவரது அப்பாவா வர்ற டாக்டர், லண்டன் போலிஸ் ஆபிஸர் நாசர், விக்ரம் அம்மாவா சரண்யா "ஒரு சீன்ல, நான் உன் அம்மாடா எனக்கும் தெரியும்னு கண்டிப்பு காட்டுவார் பாருங்க, அதுதான் நான் எதிர்பாக்குற கேரக்டரைஷேஷன்", டாக்ஷி ஓட்டுனரா நம்ம சந்தானம், மாடலிங் ஏஜென்டா வர்றவர் "மெரீனா படத்துல சிவா ப்ரண்ட்", மற்றும் சர்சுல உள்ள அவரது அக்கா, சர்சுல உள்ள பாதர் மற்றும் அவருடைய குரூப், எமி-க்கு போட்டியா வர்ற அந்த பொண்ணு மற்றும் அவரின் ஆண் நண்பர், வில்லன் குரூப், லக்ஷ்மி ராய், விக்ரம் மாதிரியே இருக்கிற லக்ஷ்மி ராய் கணவர் (விக்ரம் மாதிரி இல்லைனாலும் லண்டன் காரங்க அவரை அப்படி நினைப்பதுதான் படத்தின் முக்கிய திருப்பம். விக்ரம் மாமாவா M.S.பாஸ்கர் மற்றும் தம்பி ராமையா, விக்ரம் தங்கை (ரொம்ப யோசித்து பாத்துட்டேன் பேர் மறந்து போச்சு) ஆங் சுஜிதா, மினிஸ்டர் கோட்டா சீனிவாசா ராவ், டெல்லி போலிஸ் ஆபிஸர் சாயாஜி ஷிண்டே, அனுஷ்கா தங்கை (விக்ரமுடன் சூப்பர் காமெடி), அப்பா டெல்லி கணேஷ், முறை மாப்பிள்ளை (அவர் பேரை யாராவது சொல்லுங்க) அவ்வளவுதான்னு நினைச்சுடாதீங்க இன்னும் அனுஷ்கா ப்ரண்டு, காது கேட்காத வேலைக்காரி, எப்பப்பா முடியலா இன்னும் நீளும் இந்த பட்டியல்,


""""" கேட்ஸ் ஆப் மிஸ்டர் விஜய் """"


பாடல்கள் நல்லா இருக்கு, எடிட்டின்க், ஒளிப்பதிவு, இயக்கம் எல்லாமே அட்டகாசம்... 

ஒளிபதிவாளர் "நீரவ் ஷா" எப்பவுமே கிங் "இவரையும் ஹிந்திக்கு தானம் கொடுத்துறாதீங்க".

உங்களை முழுவதுமாக திருப்தி படுத்தும் இந்த தாண்டவம்.

என்ஜாய் நண்பர்களே..........

நன்றி குவைத் சபா
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget