ஆந்திராவில், பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ராணி ருத்ரமா தேவி பற்றிய, வரலாற்றுப் பின்னணியை கொண்ட கதையில், அனுஷ்கா நடிக்கிறார். இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைக்க, குணசேகர் இயக்குகிறார்.படம் பற்றி அனுஷ்காவிடம் கேட்டபோது, "ஆந்திராவின் பெரும் பகுதியை ஆட்சி செய்த, மாபெரும் வீராங்கனையாக கருதப்படும் ராணிருத்ரமாதேவியின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக எடுக்கிறார் இயக்குனர்.
ஒரே நேரத்தில், தமிழ் - தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில், ராணிருத்ரமாதேவி கதாபாத்திரத்தில், நான் நடிக்கிறேன். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் கதையில் நடிப்பது, எனக்கு சவாலான விஷயம். ஏற்கனவே, வரலாற்றுப் பின்னணியை கொண்ட, அருந்ததியில் நடித்த போது, ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். இதனால், கதையை கேட்டதும், உடனே, "கால்ஷீட் கொடுத்து விட்டேன் என்கிறார் அனுஷ்கா.