கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதி, நடிகையாக தயாராக இருக்கிறார் என, தெரிந்ததும், அவரை தமிழில் அறிமுகப்படுத்த, பெரிய போட்டா போட்டியே நடந்தது. ஆனால், "என்ட்ரியே மிரட்டலாக இருக்க வேண்டும் என, நினைத்த அவர், பாலிவுட்டின் மீது பாசம் காட்டி, "லக் என்ற படத்தின் வாயிலாக, சினிமா பிரவேசம் செய்தார் ஸ்ருதி. பின், தெலுங்கு தேசத்திற்குச் சென்ற அவர், "7ம் அறிவு மூலம், தமிழ் சினிமாவுக்கு வந்தார்.இந்நிலையில், ஸ்ருதிக்கு மீண்டும், இந்தியில் நடிக்க அழைப்பு வந்துள்ளது.
இந்தப் படத்தை, பிரபுதேவா இயக்குகிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற, "நுவ்வு ஒஸ்தானன்டே நேனொத்தன்டனா என்ற படத்தை, இயக்கினார். அந்தப் படம் தான், "உனக்கும் எனக்கும் என்ற பெயரில், தமிழில் வெளி வந்தது. தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளிலும், திரிஷா ஏற்று நடித்த வேடத்தில், இந்தியில் ஸ்ருதி நடிக்கிறார்.