ஆன்ட்ராய்டு மொபைலில் மெமரியை பராமரிக்க வாங்க!


ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் மெமரியை அவ்வப்போது கண்கானித்து கொள்வது மிக அவசியம். அதிக விலை போட்டு வாங்கும் ஸ்மார்ட்போன்களில், என்னதான் உயர்ந்த தொழில் நுட்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதன் வேகம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன்களின் வேகம் குறைய மெமரியும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இதனால் தேவையில்லாத விஷயங்களையும், தகவல்களையும்
அவ்வப்போது அகற்றுவது சிறந்தது. அதிக மெசேஜ்கள், புகைப்படங்கள் நிறைய இடத்தை காத்து கொள்ளும். இதனால் புதிதாக ஏதேனும் தகவல்களை லோட் செய்ய வேண்டும் என்றால் தாமதமாகும்.
நிறைய புகைப்படங்கள் எடுத்தாலும், அதில் சரியில்லாதவற்றை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும். இப்படி செய்யாமல் நிறைய புகைப்படங்களை ஸ்மார்ட்போன்களில் சேர்த்து வைத்து கொள்வதால், முக்கியமான நேரத்தில் புதிய புகைப்படங்களை க்ளிக் செய்ய முடியாமல் போகும்.
இதனால் புகைப்படங்களை டெலீட் செய்தால் தான் அடுத்த புகைப்படமோ, வீடியோவோ எடுக்க முடியும். தேவையில்லாத புகைப்படங்களை முதலில் டெலீட் செய்து கொள்வது அவசியம். இப்படி அடிக்கடி டெலீட் செய்ய நேரமில்லாதவர்கள், முக்கிய தகவல்களை பிசி கம்ப்யூட்டர்களில் ஸ்டோர் செய்து கொள்வது நல்லது. இதனால் ஸ்மார்ட்போனின் மெமரி கார்டில் நிறைய இடத்தினை தக்க வைத்து கொள்ள முடியும்.
டெக்ஸ்ட மற்றும் பிக்சர்மெசேஜ்களுக்கு, பிரத்தியேகமாக ஆட்டோமேட்டிங் டெலீட் செட்டிங்ஸ் வசதியினை செட் செய்து கொள்வது சிறந்தது. போன் மெமரியில் நிறைய இடத்தினை தக்க வைத்து கொள்ள வேண்டும். இதனால் புகைப்படங்கள், வீடியோ ரெக்கார்டிங் போன்றவற்றை எக்ஸ்டர்னல் மெமரி கார்டில் சேகரித்து கொள்வது நல்லது.
இது போல் மெமரியில் இருக்கும் தேவையில்லாத தகவல்களை நீக்குவதன் மூலம் மெமரி வசதிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்பேஸை சரியாக தக்க வைத்து கொள்ள முடியும். அதே சமயம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் வேகத்தினையும் சரியாக பராமரித்து கொள்ள முடியும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget