
ஜீவாவுக்கு மனநோயாளி வேடம் ஒன்றும் புதிதில்லை. ஆனால், ஒரு சிறிய வேடத்தில் மனநோயாளியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது தான் சிறப்பு தகவல். பி.டி. செல்வக்குமார் இயக்கும் ஒன்பதில் குரு படத்தில்தான் ஜீவா மனநோயாளியாக ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் வினய் கதாநாயகனாக நடிக்க, லட்சுமிராயும், அஞ்சலியும் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தில் ஜீவாவைத் தவிர, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், சத்யன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
படத்தை இயக்கும் செல்வக்குமார் ஜீவா உள்ளிட்ட சில கதாநாயகர்களின் பி.ஆர்.ஒ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.