கவுதம் மேனன் இயக்கத்தில் இளையராஜாவின் இசை விருந்தாக உருவாகியிருக்கும் நீதானே என் பொன்வசந்தம், வரும் பிப்ரவரி 14 -ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. ஜீவா - சமந்தா நடித்துள்ள இந்தப் படம் தெலுங்கிலும் நேரடிப் படமாக உருவாகியுள்ளது. ஏற்கெனவே பாடல்கள் படுஹிட்டாகியுள்ளதால், அந்த சூடு குறையும் முன்பே படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தீபாவளி மற்றும் பொங்கலுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் மோதுவதால், சோலோவாக
காதலர் தின ஸ்பெஷலாக களமிறங்குகிறது நீதானே என் பொன்வசந்தம். தெலுங்கிலும் அதே தேதியில் வெளியாகிறது. தெலுங்குப் பதிப்பில் ஹீரோவாக நடித்திருப்பவர் நானி.
காதலர் தின ஸ்பெஷலாக களமிறங்குகிறது நீதானே என் பொன்வசந்தம். தெலுங்கிலும் அதே தேதியில் வெளியாகிறது. தெலுங்குப் பதிப்பில் ஹீரோவாக நடித்திருப்பவர் நானி.