இளைய தளபதி விஜய்யின் அடுத்த படம் - புதிய தகவல்

துப்பாக்கி படத்திற்கு பின்னர் ஏ.எல். விஜய் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இதனையடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கோலிவுட் பட உலகில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ஆரம்பகால வெற்றிப் படங்களில் பாதியை தயாரித்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி. சௌத்ரியும், விஜய்யும் சேர்ந்தால் சக்சஸ் என்று சொல்லும் அளவுக்கு வெற்றிக் கூட்டணி இது. பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும்,
லவ் டுடே, திருப்பாச்சி என்று அனைத்தும் ஹிட் படங்கள்.
இந்த கூட்டணி அடுத்ததாக இணைய உள்ளது. இந்த படத்தை ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த நேசன் இயக்குவதாக கூறப்படுகிறது. வேலாயுதம் படத்தில் நடிக்கும் போதே விஜய்க்கு இந்த கதையை நேசன் கூறியுள்ளார். அந்த கதை பிடித்ததை அடுத்து திரைக்கதை அமைக்கும் பணியில் நேசன் ஈடுபட்டுள்ளாராம். விரைவில் இதற்கான அறிவிப்பினை ஆர்.பி. சௌத்ரி வேளியிடுவார் என்று கூறப்படுகிறது.