
களவாணி பட நாயகன் விமல் அந்த படத்தில் நடித்த ஓவியாவுடன் ரொம்பவே நட்பாக இருந்தார். அவருக்காக தன்னிடம் கால்சீட் கேட்டு வரும் அனைத்து இயக்குனர்களிடமும் நேரடியாகவே சான்ஸ் கேட்பார். அப்படி கேட்டு கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு என்ற இரண்டு படங்களில் சான்ஸ் வாங்கிக்கொடுத்தார். ஆனால் தொடர்ந்து ஓவியாவுக்கு அவர் சிபாரிசு செய்து வருவதை மீடியாக்கள் பரபரப்பு செய்தி வாசித்ததால், இப்போது சத்தமில்லாமல் ஓவியாவை கழட்டி விட்டு விட்டார் விமல்.
ஆனால் அந்த இடத்துக்கு இப்போது பிந்து மாதவியை சேர்த்திருக்கிறார். பாண்டிராஜ் இயக்கி வரும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் பிந்துமாதவியிடம் ஆரம்பத்தில் சாதாரணமாக பேசிய விமல், இப்போது ரொம்ப டீப்பாகி விட்டாராம். ஒருநாள் ஓய்வு கிடைத்தாலும் பிந்துமாதவி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு ஆஜராகி அன்பொழுக பேசி மகிழ்கிறாராம். தனது வளர்ச்சிக்கு இப்படியொரு நடிகர் தேவைதான் என்பதால் நடிகையும், நடிகருடன் ஓவர் கரிசனம் காட்டி வருகிறாராம். இதன்காரணமாக, எழில் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள இது பூக்களின் தேசம் என்ற படத்தில் நடிப்பதற்கு பிந்து மாதவிக்கு சிபாரிசு செய்து தன்கூடவே வைத்திருக்கிறார் விமல்.