டர்டி பிக்சரில் சில்க் ஸ்மிதாவாக நடிக்க காஜல் அகர்வால் மறுப்பு


தூக்கில் தொங்கி இறந்த பழைய கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இந்தியில் ‘டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாகி வெளிவந்தது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்து இருந்தார். படுக்கையறை காட்சிகளிலும், கவர்ச்சியிலும் துணிச்சலாக ஆடைகுறைப்பு செய்து நடித்து இருந்தார். இப்படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. 

இதையடுத்து ‘டர்டிபிக்சர்’ படத்தை தெலுங்கு, மலையாள மொழிகளில் ரீமேக் செய்கின்றனர். மலையாளத்தில் தயாரிக்கும் படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார். தெலுங்கில் சில்க்ஸ்மிதா வேடத்தில் நடிக்க காஜல் அகர்வாலை அணுகினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். 

‘டர்டிபிக்சர்’ படத்தில் ஆபாச காட்சிகள் உள்ளதால் அதுபோல் தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். வித்யா பாலனை நான் மதிக்கிறேன். ஆனால் அவரைப்போல் கவர்ச்சியாக என்னால் நடிக்க இயலாது என்று ஒதுங்கி விட்டார். 

காஜல் அகர்வால் சமீபத்தில் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்துள்ளன. எனவே அவர் நடித்தால் படத்தை பெருந்தொகைக்கு வியாபாரம் செய்யலாம் என்று கருதி ரூ. 1 1/2 கோடி சம்பளம் தர தயார் என்று தயாரிப்பாளர் ஆசை வார்த்தை கூறினார். ஆனாலும் காஜல் அகர்வால் மசியவில்லை. இதையடுத்து அவருக்கு பதில் வேறு நடிகையை தேடுகிறார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்