கோலிவுட்டில் காலடி பதித்த டோலிவுட் நாயகி ஸ்ரீரம்யா!


தெலுங்குப் படம் ஒன்றுக்காக, காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக நிஜமாகவே மொட்டை போட்டுக் கலக்கிய நடிகை ஸ்ரீரம்யா தற்போது தமிழுக்கு வந்துள்ளார். யமுனா படத்தின் நாயகிதான் இந்த ஸ்ரீரம்யா. மணிரத்தினத்தின் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கணேஷ்பாபு. இவர் இப்போது இயக்குநராகியுள்ளார். இவரது முதல் படம்தான் யமுனா. இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள தெலுங்கு நடிகை ஸ்ரீரம்யா குறித்து மிகப் பெருமையாக பேசுகிறார் கணேஷ் குமார்.
ஏன் கணேஷ் என்று கேட்டால் அவர் சொன்ன பதிலைப் பாருங்கள்..

பல முன்னணி நாயகிகளை நான் இப்படத்திற்காக அணுகினேன். ஆனால் அவர்கள் நடிக்க மறுத்து விட்டார்கள். சிலர் நடிக்க முன்வந்தபோதும் அவர்கள் பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தவில்லை. இந்த நிலையில்தான் ஸ்ரீரம்யாவை நான் அணுகினேன். ஸ்ரீரம்யா 1940 ல ஒக கிராமம் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர். மிகச் சிறப்பான நடிகை. அந்தப் படத்தில் நிஜமாகவே மொட்டை போட்டு அதிர வைத்தவர்.

அவ்வளவு சிறிய வயதில் தலையை மொட்டை அடிக்க ஒரு பெண்ணுக்கு மனசே வராது. ஆனால் பாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக மொட்டை போட்டுக் கொண்டு நடித்தவர் ரம்யா. இதனால்தான் அவரையே எனது படத்தின் நாயகியாக்கினேன் என்றார் கணேஷ் குமார்.

யமுனா படத்தின் கதையைச் சொன்னதுமே டக்கென்று நான் இதில் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டாராம் ஸ்ரீரம்யாவும். எனவே இதனால் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தெரிய வருவது என்னவெனில் தெலுங்குத் திரையுலகிலிருந்து மேலும் ஒரு நல்ல நடிகை வருகிறார் என்பதே..

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget