
சிம்பு, வரலட்சுமி நடிப்பில் தீபாவளி அன்று வெளிவரவிருக்கும் படம் போடா போடி. இந்த படத்தின் கதை குறித்த தகவல்கள் இப்போது கசிந்திருக்கின்றன. இளம்வயதில் தோன்றும் காதல் சரியானதுதானா? அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதை நடன பின்புலத்தில் சொல்லியிருக்கிறார்களாம் போடா போடி படத்தில். கதைப்படி, சென்னையில் இருந்து மேற்கத்திய நடனம் கற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா செல்கிறார் சிம்பு. போகிற இடத்தில் நடனத்தை மட்டும் கற்றுக் கொண்டால் பரவாயில்லையே,
அங்கே படிக்கும் வரலட்சுமியுடன் காதல் வருகிறது. நடனப்பள்ளியை நடத்தி வரும் ஷோபனா காதலிக்காதீங்க என்று சொல்லியும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் இருவரும் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். காதல், பின்பு ஈகோ பிரச்சினையில் வந்து நிற்கிறது.
ஒருநாள் தனது சித்தப்பாவான விடிவி கணேஷிடம் வந்து நிற்கிறார் வரலட்சுமி. ப்ரிமேரிட்டல் செக்ஸில் ஈடுபட்டத்தன் மூலம் கர்ப்பமாகிவிட்டதாக சொல்கிறார். அவசர அவசரமாக இருவருக்கும் கல்யாணத்தைப் பண்ணி வைக்கிறார் கணேஷ். இளமையில் ஜாலியாக இருக்க வேண்டிய காலத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. திருமண வாழ்க்கையில் ஏற்படும் ஈகோ இருவரையும் பிரித்துவிடுகிறது. பிரிந்தவர்களை அவர்களின் காதலும் அவர்கள் நேசிக்கின்ற நடனமும் அவர்களை எப்படி சேர்த்து வைக்கிறது என்பதுதைத்தான் போடா போடியில் கலர்ஃபுல்லான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.
கதையைக் கேட்கும் போது, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம்தான் போடா போடி என்று சிம்பு ஏற்கனவே சொன்னது சரியென்றே தோன்றுகிறது.