
தங்களது கணிணியில் ஏதாவது ஒரு யுஎஸ்பி சாதனத்தை முதல் முறை இணைக்கும் போது சில நொடிகளில் அதன் டிரைவர் நிரல்கள் நிறுவப்பட்டு பின்பு அந்த சாதனம் கண்டறியப்படும். நீங்கள் விரும்பினால் கணிணியில் இது வரை இணைக்கபட்டுள்ள அனைத்து யுஎஸ்பி சாதனங்களையும் அதன் விவரங்களோடு பார்க்கலாம். தேவைபட்டால் குறிப்பிட்ட யுஎஸ்பி சாதனத்தை பட்டியலில் இருந்து நீக்கலாம். அடுத்த முறை தாங்கள் நீக்கம் செய்த சாதனம் இணைத்து புதிய சாதனத்தை
ஒருமுறை நிறுவப்பட்டு கண்டறியப்படும். இந்த மென்பொருளின் மூலம் கணிணியில் தற்போது இணைக்கப்பட்டுள்ள மற்றும் ஏற்கனவே பயன்படுத்திய யுஎஸ்பி சாதனத்தின் பெயர், விவரம், வகை, முதல் இணைப்பு இணைத்த தேதி, தயாரிப்பாளர் எண், தயாரிப்பு எண் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள உதவுகிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
![]() |
Size:75.7KB |