இன்றைய காலத்தில் நிறைய பேர் உடல் எடையை அதிகமாக இருப்பதால், அவற்றை குறைப்பது மிகவும் கடினமானது என்று நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. உண்மையில், உடல் எடையை குறைப்பது அவ்வளவு பெரிய கஷ்டமான ஒரு விஷயம் அல்ல. எப்படி உணவுகள் உடல் எடையை அதிகரிக்கிறதோ, அதே உணவுகளை வைத்தே உடல் எடையையும் குறைக்கலாம்.
அதிலும் தற்போது புத்தாண்டு பிறக்க போவதால், நிறைய பார்ட்டிகள் நடக்கும். நண்பர்களுடன் வெளியே சென்று பல செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கேக், வறுத்த உணவுகள் என்று பலவற்றை சாப்பிடக் கூடும்.
அதுமட்டுமின்றி, வீட்டில் இருக்கும் பெண்கள், வீட்டு வேலையை செய்து கொண்டு, நன்கு சாப்பிடுவார்கள். அதனால், அவர்கள் உடல் எடை அதிகரிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே அவ்வாறு உடல் எடை அதிகரித்து, வடிவம் மாறாமல் இருக்க, பெண்கள் ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் போதுமானது.
மேலும் அந்த உணவுகளோடு, உடற்பயிற்சியையும் தினமும் தவறாமல் செய்து வந்தால், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம். இந்த உணவுகள் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். இப்போது உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
பப்பாளி
இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த பழம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, உடலில் கொழுப்புக்கள் தங்காமல் தடுப்பதோடு, தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கிறது. மேலும் இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள லிமினாய்டு மற்றும் லைகோபைன் என்னம் பொருட்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
பசலைக்கீரை
பெண்கள் நிச்சயம் பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக பசலைக் கீரை மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், வயிறு நிறைந்திருப்பதோடு, கொழுப்புக்களும் கரைந்துவிடும்.
தானியங்கள்
பெண்களின் டயட்டில் தானியங்கள் மிகவும் முக்கியமானவை. இதில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அதுமட்டுமின்றி, இந்த உணவுகளை சாப்பிட்டால், எளிதில் செரிமானமடைவதோடு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
மிளகாய்
கார உணவுகள் உடல் எடையை குறைக்கும். மேலும் காரமான உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படாமலும் தடுக்கும்.
ராஸ்பெர்ரி
பெர்ரி பழங்களில் ராஸ்பெர்ரியை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்பு செல்களை கரைப்பதோடு, அதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தின் வேகத்தை குறைக்கும். இதனால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
நட்ஸ்
நட்ஸில் பாதாம் ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ். ஏனெனில் நட்ஸில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. எனவே இதனை உணவு நேரங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிட்டால், பசியானது நீண்ட நேரம் எடுக்காது.
ஆரஞ்சு
உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதில் ஆரஞ்சு பழங்கள் மிகவும் சிறந்த உணவுப்பொருள். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, சிட்ரஸ் ஆசிட் இருப்பதால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.
வேர்க்கடலை
வேர்க்கடலை பசியைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையை அதிகரிக்காமலும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்கும். எனவே வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.
பெர்ரி
பெர்ரிப் பழங்கள் எப்போதும் ஒரு சிறந்த கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருள். அதுமட்டுமின்றி அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவையும் பெண்கள் உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டியுள்ளது.
எலுமிச்சை
எலுமிச்சை மற்றும் தேன் கலந்த ஜூஸ் ஒரு சிறந்த பெண்களுக்கான பானம். எலுமிச்சையும் ஒரு சிட்ரஸ் பழம் என்பதால், அவை பசியை தூண்டாமல், கொழுப்புக்களை கரைத்துவிடும்.