விஸ்வரூபம் பார்ட் 2 கமல் அறிவிப்பு


விஸ்வரூபம் படம் இன்னும் 10நாட்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அடுத்தபடியாக விஸ்வரூபம் படத்தின் பார்ட்-2-வை எடுக்க போவதாக கமல் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஆரோ 3டி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழிநுட்பங்களுடன் ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூம். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜனவரி 11ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாக உலகில் எந்த ஒரு சினிமா கலைஞரும் செய்திராத புதுமையாக இப்படத்தை டி.டி.எச்.,ல் திரையிட இருக்கிறார் கமல்ஹாசன். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்‌பை கமலும் அறிவித்துவிட்டார். ஜனவரி 10ம் தேதி இரவு விஸ்வரூபம் படம் டி.டி.எச்-.ல் ஒளிப்பரப்பாக இருக்கிறது. 

இந்நிலையில் விஜய் டி.வியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் டுவென்டி-20 நிகழ்ச்சியில் கமல்ஹாசனும், பூஜா குமாரும் பங்கேற்றனர். அப்போது கமலிடன் விஸ்வரூபம் படம் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு கமலும் பதிலளித்தார். அப்போது விஸ்வரூபம் படத்தின் பார்ட்-2 பற்றிய பேச்சை படத்தின் ஆரம்பித்தார் நாயகி பூஜா குமார். உடனே கமல் நானே இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி தனியாக பிரஸ்மீட் வைத்து சொல்லலாம் என்று நினைத்தேன். இப்போது விஜய் டி.வி. மூலமாகவே அதை தெரிவிக்க‌ிறேன்.  விஸ்வரூபம் பார்ட்-2 எடுக்கப் போகிறேன் என்றார். அது எப்போது என்ற கேள்விக்கு விஸ்வரூபம் முதலில் வெளியாகட்டும். பிறகு பார்ட்-2 பற்றி சொல்கிறேன் என்றார். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget