ஆடியோ காசட்களிலும் , பெரிய வானொலிப் பெட்டிகளிலும் (radio)பாடல்கள் கேட்ட காலம் போய் இன்று அனைவரும் mp3 பிளேயர் , ஐபோட் போன்ற சாதனங்களுக்கு மாறி விட்டனர் . இதில் பாடல்கள் கேட்பதும் சேமித்து வைப்பதும் மிக மிக எளிது .1000 திற்கும் மேற்பட்ட பாடல்களை நம் கைக்குள் வைத்திருப்பது அறிவியலின் அரிய கண்டுபிடிப்பாகும்.
இவ்வகையான சாதனங்களில் சில நேரம் நமக்கு பிடித்த பாடல்களை தேடுவது கடினமாக இருக்கும் .இது ஏன் என்றால் தமிழ் mp3 பாடல்களை நாம் தரவிறக்கும் போது , இணையதளங்கள் அந்த பாடலில் அவர்கள் பெயரை போட்டு விடுவர் . உதாரணமாக பில்லா2 பாடலில் ஆல்பம் பெயர் பில்லா2 என்று இருக்கும் அனால் உள்ளே பாடல்களின் பெயரோ (www.muruganandam.in ) என்று இருக்கும்.
எனவே நாம் குறிப்பிட்ட பாடலை தேர்வு செய்வது சிறிது குழப்பமாக இருக்கும் . இந்த தொல்லையை போக்குவதற்காகவே Mp3tag என்ற மென்பொருள் உள்ளது . இதில் நீங்கள் சுலபமாக ஒரே நேரத்தில் 1௦௦௦ திருக்கும் மேற்பட்ட பாடல்களின் artist name , album name , year போன்ற பகுதிகளை எளிதாக மாற்றலாம் .தீவிர இசை பிரியர்கள் மற்றும் ஆடியோ ரெகார்டிங் தொழில் செய்யும் நண்பர்களுக்கு இது மிகவும் அவசியமான ஓர் மென்பொருள் . கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Size:3.06MB |