
கமெராவின் உதவி கொண்டு கிளிக் செய்யப்படும் அழகிய காட்சிகளில் காணப்படும் தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்கு விசேடமான கணனி மென்பொருட்கள் உதவியாக அமைகின்றன. இவ்வகையான மென்பொருட்களின் வரிசையில் தற்போத Background Remover எனும் மென்பொருளானது மேலதிக அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இம்மென்பொருளின் உதவியுடன் புகைப்படங்களில் காணப்படும் பொருட்களினையோ
அல்லது பின்னணி ஒன்றினையோ இலகுவாக பிக்சல்களின் எண்ணிக்கை மாறாது அகற்றிவிட முடியும்.
அத்துடன் ஒளி ஊடுபுகவிடும்(Transparent) பின்னணியைக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பொருத்தமான வர்ணங்களை பயன்படுத்தி மெருகூட்டிக்கொள்ளவும் முடியும்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
![]() |
Size:14.75MB |