டேவிட் படத்திற்கு சென்சார் யு/ஏ சான்று


விக்ரம்-ஜீவா நடித்துள்ள டேவிட் படத்தில் இரண்டு காட்சிகளை மட்டும் கத்தரித்துவிட்டு யு/ஏ சான்று கொடுத்துள்ளனர் தணிக்கு குழுவினர். மணிரத்னத்தின் உதவியாளர் பிஜய் நம்பியார் இயக்கத்தில், விக்ரம், ஜீவா, இஷா சர்வானி, தபு ஆகியார் நடிப்பில் உருவாகியுள்ள படம் டேவிட். தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழியில் இப்படம் உருவாகியுள்ளது.
அனிருத் உட்பட 7பேர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இப்படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. 

இந்நிலையில் இப்படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இந்தியில், வினய் விர்மானி நடித்த சில காட்சிகள் மத உணர்வை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இரண்டு காட்சிகளுக்கு கத்தரி போட்டு படத்திற்கு யு/ஏ சான்று கொடுத்துள்ளனர். 

தணிக்கை குழுவினர் கத்தரி போட்டதற்கு பிஜய் நம்பியார் எதிர்த்துள்ளார். இதுகுறித்து அவர்கூறும்‌ போது, படத்திற்கு அந்த காட்சி மிகவும் அவசியம் என்று வாதிட்டோம். ஆனால் தணிக்கை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அந்த காட்சிகளை நீக்காவிட்டால் ஏ சான்று தான் கொடுத்திருப்பார்கள். இன்றைய சூழலில் ஒருபடம் ஏ சான்று பெற்றால் அதனை டி.வி.க்களில் சாட்டிலைட் உரி‌மம் பெறுவது உள்ளிட்ட பல சிக்கல்கள் உள்ளன. அதை கருத்தில் கொண்டு இரண்டு காட்சிகளை நீக்கி யு/ஏ சான்று பெற்றோம் மேலும் தமிழிலும் சில காட்சிகள் நீக்கப்பட்டு, யு/ஏ சான்று பெற்றோம் என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்